உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கழிவுநீர் தொட்டியால் விபத்து அபாயம்

கழிவுநீர் தொட்டியால் விபத்து அபாயம்

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளது. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி சேவை மையம் அருகே, சில ஆண்டுக்கு முன், சமூக கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.இந்த கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சேகரிக்க, அப்பகுதியில் கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது, கழிவுநீர் தொட்டி பராமரிப்பு இல்லாமல், ஒரு பகுதி சிலாப் இன்றி திறந்த நிலையில் உள்ளது.இதனால், அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகள், அடிக்கடி கழிவுநீர் தொட்டியின் அருகே விளையாடி வருகின்றனர். அவ்வாறு விளையாடும்போது குழந்தைகள் எதிர்பாராதவிதமாக திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை