உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வேகத்தடை இல்லாததால் விபத்து நடக்கும் அபாயம்

வேகத்தடை இல்லாததால் விபத்து நடக்கும் அபாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியில் இருந்து, கீழம்பி வழியாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும், 5 கி.மீ., பிரதான இணைப்பு சாலை உள்ளது.இந்த சாலையில், சிறுகாவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம், மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அலுவலகம், காதி கிராம தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.மேலும், தனியார் கல்லுாரிகளும் இயங்கி வருகின்றன.இந்த பல்வேறு அலுவலகத்திற்கு செல்லும் கிராமம் மற்றும் நகர மக்கள் பிரதான சாலையை கடக்க முடியவில்லை.இந்த சாலை செல்லும் வாகனங்கள், அசுர வேகத்தில் செல்வதால், அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. கடந்த மாதத்தில், நடந்த இரு விபத்துகளில் இருவர் பலியாகி உள்ளனர்.எனவே, சிறுகாவேரிபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம், ஒலிமுகமதுபேட்டை மின் வாரிய அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்களின் எதிரே வேகத்தடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை