உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

காஞ்சிபுரம்:அரசு போக்குவரத்து துறை சார்பில் ஜன., 15 முதல் பிப்., 14 வரை தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நடத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், 108 ஆம்புலன்ஸ் வாகனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.காஞ்சிபுரம் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம்தலைமை வகித்து பேசியதாவது:நம் கண் முன் விபத்து நடந்தால் போலீசாருக்கும், '108' ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், காயமடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தால், மத்திய அரசு 5,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்குகிறது.அதேபோல், விபத்தில் சிக்கிய ஒன்று அல்லது ஐந்து நபர்களை காப்பாற்றினால், 20,000 ரூபாயும், விருதுகளும் கூட வழங்கப்படுகிறது. மேலும், நெட்வொர்க் சிக்னல் இல்லாமலும் நாம் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை