மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக திருவாசகம் முற்றோதல்
7 minutes ago
குப்பை கொட்டும் இடமாக மாறிய பொன்னேரி ஏரிக்கரை
09-Dec-2025
தடுப்பு இல்லாத சிறுவாக்கம் வளைவு
09-Dec-2025
பெருங்களத்துார்: பெருங்களத்துாரில் 1.89 கோடி ரூபாய் செலவில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலம், பழைய பெருங்களத்துார், ஆர்.எம்.கே., நகரில் பூங்கா உள்ளது. இதை சுற்றியுள்ள மக்கள், விளையாட்டு மைதானமாகவும், முதியவர்கள், பெண்கள் நடைபயிற்சி செய்யும் இடமாகவும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மாணவர்களின் வசதிக்காக, இப்பூங்காவில், 1.89 கோடி ரூபாய் செலவில், அறிவியல் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அறிவியல், கணிதம், வேதியியல், இயற்பியல் புத்தகங்களில் உள்ள பாடங்களை, மாணவர்கள் செயல்முறை மூலம் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில், 72 உபகரணங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. சில நாட்களில் இப்பணி முடிந்து, இப்பூங்கா பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.
7 minutes ago
09-Dec-2025
09-Dec-2025