உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை விபத்தில் மாணவர்கள் பலி

சாலை விபத்தில் மாணவர்கள் பலி

ஊத்துக்கோட்டை:சென்னை, எருக்கஞ்சேரி, சர்மா நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கார்த்திக், 21. வேல்டெக் கல்லுாரியில், பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் ஜெயலலிதா, 19 . திருவள்ளூர் அருகே, ஸ்ரீராம் பாலிடெக்னிக்கில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று காலை இருவரும் பைக்கில், ஊத்துக்கோட்டை தண்டலம் அருகே சென்றபோது, பைக் நிலை தடுமாறி, டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ