மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
8 hour(s) ago
மின்விளக்கு வசதி இல்லாத கருங்குட்டை சுடுகாடு
8 hour(s) ago
காஞ்சிபுரம்:இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளுக்கும், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு பொருட்கள் வழங்கும் விழா காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.இதில், கிரிக்கெட், கைபந்து, கால்பந்து, எறிபந்து, டென்னிஸ், ஸ்கிப்பிங், கேரம், சிலம்பம், பேட்மிட்டன், இறகு பந்து என, 50,470 ரூபாய் மதிப்புள்ள 51 வகை விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு, என, 40 ஊராட்சிகளுக்கும்,மொத்தம், 25 லட்சத்து, 73,945 ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் ஊராட்சி நிர்வாகங்களுக்கு வழங்கும் விழா நடந்தது.இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் காஞ்சிபுரம் எழிலரசன், உத்திரமேரூர் சுந்தர் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்கினர்.இதில், ஒன்றிய சேர்மன் மலர்கொடி, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், முத்துகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
8 hour(s) ago
8 hour(s) ago