உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ஏரி நீரில் துளிர் விட்டிருக்கும் தைல மரக்கொம்புகள்

 ஏரி நீரில் துளிர் விட்டிருக்கும் தைல மரக்கொம்புகள்

காஞ்சிபுரம்: சிறுவாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் பகுதியில் நட்ட, தைல மரக்கொம்புகள் துளிர் விட துவங்கியுள்ளன. காஞ்சிபுரம் அடுத்த, சிறுவாக்கம் கிராமத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி சிறுவாக்கம், மதுரா மோட்டூர், காரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் விளை நிலங்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். வடகிழக்கு பருவ மழையால், சிறுவாக்கம் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறிக் கொண்டிருக் கிறது. இந்த ஏரியில் இருக்கும் மீன்கள் வெளியேறிவிடக்கூடாது என, மீன் ஏலம் எடுத்தவர், குறுக்கே தடுப்பு வலை கட்டி உள்ளார். இந்த வலை அறுந்துவிடக்கூடாது என, ஒரு அடிக்கு ஒரு அடி இடைவெளி விட்டு தைல மரக்கொம்புகளை நட்டுள்ளார். இந்த தைல மரக்கொம்புகள் துளிர் விட்டு வளர துவங்கியுள்ளன. வெட்டி நட்ட தைல மரக்கொம்புகள் துளிர் விட்டு வளர துவங்கி இருப்பது பசுமை ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை