உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விவசாய கிணறுகளின் நீர்மட்டம் சரிந்தது

விவசாய கிணறுகளின் நீர்மட்டம் சரிந்தது

உத்திரமேரூர், உத்திரமேரூர் வட்டாரத்தில், சொர்ணவாரி பட்டத்திற்கு இதுவரை, 650 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரும், எள்ளு, உளுந்து, வேர்க்கடலை போன்ற தானிய பயிர் வகைகள், 500 ஏக்கர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இதனிடையே, தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மழையும் இல்லாததால் ஆறு, ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் வற்றி, விவசாயக் கிணறுகளின் நீர்மட்டமும் வேகமாகக் குறைந்து வருகிறது.இந்நிலையில், மருதம்,கடல்மங்கலம், பொற்பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விவசாயக் கிணறுகளில் நீர் ஊற்றுகள் வற்றியதை பயன்படுத்தி, கிணறுகள் துார்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது கிணறுகளை ஆழப்படுத்துவதால், கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழைக்கு பயனுள்ளதாக இருக்கும் என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ