உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓட்டி பார்ப்பதாக கூறி காருடன் தப்பிய இருவர் கைது

ஓட்டி பார்ப்பதாக கூறி காருடன் தப்பிய இருவர் கைது

கோயம்பேடு:கோயம்பேடு, சின்மயா நகரை சேர்ந்தவர் விஜயன், 45. இவருக்கு சொந்தமான காரை விற்பதற்கு இணையதளத்தில் விளம்பரம் செய்தார்.அதில் அவர் கொடுத்திருந்த மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்ட இருவர், காரை வாங்கி கொள்வதாக கூறி, நேற்று முன் தினம் விஜயன் வீட்டிற்கு வந்தனர்.காரை ஓட்டி பார்க்க அவர்களிடத்தில் விஜயன் சாவியை கொடுத்தார். ஆனால், அவர்கள் காருடன் மாயமாகினர். அதிர்ச்சி அடைந்த விஜயன், கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார், 25, கொளத்துார் பகுதியை சேர்ந்த ஜான், 45, ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி