உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இடையாம்புதுாரில் ரேஷன் கடை ஏற்படுத்த வலியுறுத்தல்

இடையாம்புதுாரில் ரேஷன் கடை ஏற்படுத்த வலியுறுத்தல்

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இடையாம்புதுார் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.இப்பகுதிக்கான ரேஷன் கடை, இடையாம்புதுார் அடுத்துள்ள மனமாங்கொள்ளை கிராமத்தில் அமைந்துள்ளது.இதனால், ரேஷன் பொருட்கள் வாங்கச் செல்லும் இடையாம்புதுார் கிராம வாசிகள், இருசக்கர வாகனம் மூலம் அல்லது நடைபயணமாக சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.இதனால், வெயில் மற்றும் மழை நேரங்களில், ரேஷன் கடைக்கு சென்று வருவதில் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.எனவே, இடையாம்புதுார் கிராமத்தில் பகுதிநேர ரேஷன்கடை ஏற்படுத்த அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை