உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏரி கரையின் பசுமை பரப்பு அதிகரிக்கப்படுமா?

ஏரி கரையின் பசுமை பரப்பு அதிகரிக்கப்படுமா?

குன்றத்துார்:சென்னையின் குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மேற்புற பகுதி ஸ்ரீபெரும்புதுார் அருகே காட்டரம்பாக்கம், கீவளூர், தண்டலம், மேவளூர் குப்பம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது.இங்கு வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, நாட்டு மரங்களை நடவு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:செம்பரம்பாக்கம் ஏரிக்கு இறைதேடி ஏராளமான பறவைகள் வருகின்றன. ஏரியின் மேற்புற பகுதியில் காட்டரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பேடு பகுதியில் காப்புகாடு உள்ளது.மேலும், காட்டரம்பாக்கம், கீவளூர் பகுதிகளில் ஏரியை ஒட்டி காலி நிலங்கள் உள்ளன. இங்கு, அதிக எண்ணிக்கையிலான மரங்களை நட்டு வன பகுதியை அதிகரிக்க வேண்டும். இதனால், பல வகையான பறவைகள் பயனடையும். சுற்றுச்சூழல் மாசும் குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை