உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மின் கம்பிகள் மீது சாய்ந்துள்ள மரக்கிளைகள் அகற்றப்படுமா?

 மின் கம்பிகள் மீது சாய்ந்துள்ள மரக்கிளைகள் அகற்றப்படுமா?

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே, மின் கம்பிகள் மீது சாய்ந்துள்ள மரக்கிளைகளை, மின் விபத்து ஏற்படுவதற்கு முன் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் அடுத்த, மருதத்தில், சாலையோரத்தில், மின் கம்பங்கள் நடப்பட்டு அங்குள்ள விவசாய பம்ப் செட்டுகளுக்கு, மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுகுளம் அருகே இரு மின் கம்பங்களுக்கு இடையே செல்லும், மின் கம்பிகள் மீது புளிய மரக்கிளைகள் சாய்ந்து உள்ளன. எனவே, மின் விபத்து ஏற்படுவதற்கு முன், மருதத்தில் மின் கம்பிகள் மீது சாய்ந்துள்ள, மரக்கிளைகளை அகற்ற மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை