உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / விலை உயர்வால் நகைப்பறிப்பில் இறங்கிய தந்தை, மகன் சிக்கினர்

விலை உயர்வால் நகைப்பறிப்பில் இறங்கிய தந்தை, மகன் சிக்கினர்

நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே தலைமையாசிரியை அணிந்திருந்த தங்க செயினை அறுத்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர்கள் தங்கம் விலை ஏறியதால் செயின் பறித்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.கன்னியாகுமரி மாவட்டம், குழிக்கோடு புதுவிளையைச் சேர்ந்தவர் ஜெரோவின் பிளவன் குயின், 55, வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை. சில நாட்களுக்கு முன் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது பைக்கில் வந்த இருவர், இவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர். விசாரித்த கோட்டார் போலீசார், குருந்தன் கோடு கட்டி மாங்கோட்டைச் சேர்ந்த சிவா, 35, அவரது தந்தை சிவசங்கு, 58, ஆகியோரை கைது செய்தனர்.ஆளில்லாத வீடுகளில் திருடி வந்த இவர்கள் மீது 95 வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ