உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / போலீசாரை விமர்சித்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமின்

போலீசாரை விமர்சித்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமின்

நாகர்கோவில்:பெண் போலீசாரை தரக்குறைவாக விமர்சித்த வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு குழித்துறை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.பெண் காவலர் மற்றும் உதவி ஆய்வாளர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக சவுக்கு சங்கர் மீது களியக்காவிளை போலீஸ் எஸ்.ஐ., சுப்புலட்சுமி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று சவுக்கு சங்கர் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை சுட்டிக்காட்டி சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் வாதிட்டார். இதன் அடிப்படையில் அவருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி மோசஸ் ஜெபசிங் உத்தரவிட்டார். வேறு சில வழக்குகளில் ஜாமின் கிடைக்காததால் போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை