மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
நாகர்கோவில்:கள்ளக்கடல் எச்சரிக்கையையடுத்து கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா கடற்கரை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.கடந்த மாதம் கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போது, அதையும் மீறி கடற்கரைக்கு சென்ற, ஐந்து பயிற்சி டாக்டர்கள் உட்பட, எட்டு பேர் கன்னியாகுமரி மாவட்ட கடலில் இறந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் நேற்று நள்ளிரவு வரை கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சுற்றுலா அம்சங்களுடன் கூடிய அனைத்து கடற்கரையிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.ஐந்து பயிற்சி டாக்டர்கள் இறந்த, லெமூர் கடற்கரைக்கு செல்லும் வாசல்கள் மூடப்பட்டன. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.இதுபோல சங்குத்துறை, முட்டம், சொத்தவிளை, தேங்காபட்டணம், குளச்சல், மண்டைக்காடு கடற்கரை பகுதிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டு, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.கன்னியாகுமரியில் நேற்று காலை சூரிய உதயம் காண வந்த சுற்றுலா பயணியர், கடற்கரையில் இறங்காமல் இருக்க போலீசார் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தனர். கடலில் பெரிய அலைகள் எழுந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
24-Sep-2025 | 1
20-Sep-2025