உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / பிரியாணி கடையில் லாபம் தராமல் ரூ. 24 லட்சம் மோசடி ஜந்து பேர் மீது வழக்கு

பிரியாணி கடையில் லாபம் தராமல் ரூ. 24 லட்சம் மோசடி ஜந்து பேர் மீது வழக்கு

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெட்டுர்ணி மடத்தை சேர்ந்தவர் பர்ஜன் சாமுவேல். தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். நாகர்கோவிலில் இவருக்கு சொந்தமான இடத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த கங்காதரன், சண்முகசுந்தரம், சிவகுமார், மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜ், திருநெல்வேலியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பிரியாணி கடை போட்டுள்ளனர்.இதற்காக போடப்பட்ட ஒப்பந்தப்படி லாபத்தில் 10 சதவீதம் தருவதாக கூறியுள்ளனர். ஆனால் இவர்கள் பணம் எதுவும் கொடுக்காததை தொடர்ந்து ரூ. 24 லட்சத்து 46 ஆயிரத்து 948 மோசடி செய்ததாக மாவட்ட எஸ்.பி.யிடம் பர்ஜன் சாமுவேல் புகார் செய்தார். விசாரணை நடத்திய மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை