உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரக்கன்றுகள் பராமரிப்பு பணிகளில் மும்முரம்

மரக்கன்றுகள் பராமரிப்பு பணிகளில் மும்முரம்

கிருஷ்ணராயபுரம், வயலுார் குளத்தில், மரக்கன்றுகள் பராமரிப்பு பணிகளில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்குட்பட்ட, மழை நீர் சேமிப்பு குளம் உள்ளது. இந்த குளத்தில் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் சுற்றி களைகள் அதிகமாக வளர்ந்து வருகிறது. இதனால் மரக்கன்றுகள் வளர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, குளம் அருகில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது. மேலும் மரக்கன்றுகள் சுற்றி வளர்ந்த களைகள் அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்