| ADDED : ஜூலை 06, 2024 12:16 AM
குளித்தலை : குளித்தலையில் இருந்து, திருச்சி மார்க்கமாக நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது.குளித்தலையில் இருந்து, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கும்ப-கோணம், காரைக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்-களும், பஸ் ஸ்டாண்டில் இருந்து கரூர், முசிறி, மணப்பாறை மார்க்கமாக செல்லும் அரசு, தனியார் பஸ்கள் நெடுஞ்சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்-படுகிறது.இதனால், சாலையில் செல்லும் மற்ற வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. திருச்சி மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து பஸ்-களையும், காந்தி சிலை எதிரில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி விட வேண்டும். ஆனால், இதை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், பஸ்கள் ஒன்றையொன்று ஒன்று முந்தியும், பய-ணிகளை ஏற்றுவதிலும் தகராறு ஏற்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.இப்பகுதியில் விபத்துகளை தடுக்க, காந்தி சிலை எதிரில் பஸ்-களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கருணாநிதி, கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.