உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாரியை முந்த முயன்ற கல்லுாரி மாணவர் பலி

லாரியை முந்த முயன்ற கல்லுாரி மாணவர் பலி

கரூர் டேங்கர் லாரியை முந்த முயன்ற, கல்லுாரி மாணவர் நிலை தடுமாறி விழுந்து இறந்தார்.கரூர் மாவட்டம், புகழூர் அருகில் தவுட்டுபாளையத்தை சேர்ந்த குணசேகரன் மகன் தரணிதரன், 22. தனியார் கல்லுாரியில், பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் பகல், 10.00 மணிக்கு கரூர் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சுக்காலியூர் அருகில் பைக்கில் சென்றார். அவருடன் சரண், 18, என்ற மாணவரும் சென்றார். அவ்வழியே பெட்ரோல் டேங்கர் லாரி சென்றது. தரணிதரன் அந்த லாரியை முந்த முயன்றார். லாரி, எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியதில் நிலை தடுமாறி விழுந்தார். அதில் பலத்த காயமடைந்த, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சரண் காயமடைந்தார். பின், பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இது குறித்து, தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி