உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பஸ் ஸ்டாண்டில் பணிகள் முடிந்தும் திறக்கப்படாத புதிய கழிப்பறை

பஸ் ஸ்டாண்டில் பணிகள் முடிந்தும் திறக்கப்படாத புதிய கழிப்பறை

கரூர் ஆகரூர் பஸ் ஸ்டாண்டில், கட்டுமான பணிகள் முடிந்தும் புதிய கழிப்பறை திறக்கப்படாமல் உள்ளது.கரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து கோவை, நாகை, மதுரை, கன்னியா-குமரி, சேலம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி புதுச்சேரி மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கும் கரூர் வழியாக இரவில், அதிக பஸ்கள் செல்கின்றன. நாள்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும், நெருக்கடி மிகுந்த கரூர் பஸ் ஸ்டாண்டில், மாநக-ராட்சி சார்பில், திருச்சி பஸ்கள் நிற்கும் இடம் எதிரில் இலவச கழிப்பறை, மதுரை பஸ் நிற்கும் இடம் அருகில் கட்டண கழிப்பறை உள்ளது.இதில், இலவச கழிப்பறை சரியான பராமரிப்பின்றி, இரவில் மின் விளக்குகள் இன்றி பெயரளவுக்கு உள்ளது. பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்-பதால், கழிப்பறையை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்வதில்லை. கழிப்பறையை பயன்படுத்தும் பயணிகளுக்கு குமட்டல் ஏற்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சேலம் பஸ்கள் நிற்கும் இடத்தில் எதிரில், 31 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டண கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு, பல மாதங்களாகியும் திறக்கப்படவில்லை. உடனடியாக கழிப்பறையை திறக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் சுதா கூறுகையில்,'' ஒப்பந்ததாரர் மூலம், புதிய கழிப்பறை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை