உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேகத்தடை இருப்பது தெரியல வெள்ளைக்கோடு வரையலாமே

வேகத்தடை இருப்பது தெரியல வெள்ளைக்கோடு வரையலாமே

கரூர் : கரூர், லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில், மாநகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. அதில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கரூர் நகரப்பகுதி-களில் இருந்து, ஏராளமான வாகனங்கள் குமரன் உயர்நிலைப்-பள்ளி வழியாக, திருச்சி சாலை சுங்ககேட் உள்ளிட்ட, பல்வேறு இடங்களுக்கு செல்கிறது.பள்ளிக்கு அருகே விபத்துகளை தவிர்க்க சாலையில், சமீபத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால், அதில் வெள்ளைக்கோ-டுகள் வரையவில்லை. வேகத்தடை இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.குறிப்பாக, இரவு நேரத்தில் செல்கிறவர்கள் வேகத்தடை இருப்-பதை தெரிந்துகொள்ள முடியாமல், தவறி விழுந்து காயமடை-கின்றனர். எனவே, மாநகராட்சி குமரன் உயர் நிலைப்பள்ளி அருகே உள்ள, வேகத்தடை களில், வெள்ளை கோடு போட, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை