உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சின்னதாராபுரத்தில்இடைவிடாது மழை

சின்னதாராபுரத்தில்இடைவிடாது மழை

அரவக்குறிச்சி: சின்னதாராபுரத்தில், நீண்ட நாட்களுக்கு பிறகு, பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.சின்னதாராபுரம் பகுதியில், கடந்த ஒரு மாதமாக வெயில் மற்றும் காற்று அதிகமாக வீசியது. இந்நிலையில் நேற்று மாலை, 3:45 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இடைவிடாது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, பெய்த மழையால் பூமி குளிர்ந்தது. இதனால் சின்னதாராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை