உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்

கரூர: கரூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிக்கை: வெளிமாநிலங்களில் இருந்து, நிரந்தரமாக தமிழகத்துக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது வட்ட வழங்கல் அலுவலர் உரிய விசாரணை செய்து புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.அவர்கள், தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்-களை பெறலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ