உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் 19ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கரூரில் 19ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கரூர்: கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:கரூர் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில், மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. வரும், 19, காலை 10:00 மணி முதல், பிற்பகல் 2:00 மணி வரை முகாம் நடக்கிறது. 25க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள், 200க்கும் மேற்பட்ட பணியிடங்-களை நிரப்பவுள்ளனர்.இம்முகாமில், 8ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் பொறியியல் பட்டதாரிகள் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறலாம். தங்களுடைய சுயவிவர குறிப்பு, உரிய கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையத-ளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். விவரங்களுக்கு 0432 4-223555,9789123085 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை