உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மக்களுடன் முதல்வர் திட்டம் பெறப்பட்ட 458 மனுக்கள்

மக்களுடன் முதல்வர் திட்டம் பெறப்பட்ட 458 மனுக்கள்

குளித்தலை, குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்., அரசு பள்ளி வளாகத்தில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது.தாசில்தார் சுரேஷ் தலைமை வகித்தார். தோகைமலை யூனியன் குழு தலைவர் சுகந்தி சசிகுமார், யூனியன் கவுன்சிலர்கள் சின்னையன், புவனேஸ்வரன், பஞ்.,தலைவர்கள் கூடலுார் அடைக்கலம், கள்ளை கருப்பையா, யூனியன் கமிஷனர்கள் ராஜேந்திரன், மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் எம்.எல்.ஏ., மாணிக்கம் பங்கேற்று, பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 458 மனுக்களை பெற்றார்.வருவாய், பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, சுகாதாரம், தொழிலாளர் துறை, தாட்கோ, கால்நடை உள்ளிட்ட பல துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். மனுக்கள் வழங்கியவர்களுக்கு, ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ