உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருடன் கைதான வாலிபர் மீது தாக்குதல்

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருடன் கைதான வாலிபர் மீது தாக்குதல்

கரூர்: கரூர் அருகே, நில அபகரிப்பு புகார் வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருடன் கைதான வாலிபர் மீது, நேற்று மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்-தவர் பிரகாஷ், 50, தொழிலதிபர். இவரது மகள் ேஷாபனா பெயரில், கரூர் அருகே குன்னம்பட்டி, தோரணகல்பட்டியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், செல்வராஜ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் ஆகியோர் போலியான ஆவணங்கள் தயாரித்து, கிரையம் செய்து கொண்டதாக, கரூர் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் என்பவர், கடந்த ஜூன், 9ல் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது.அதன் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி., போலீசார், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோரை கடந்த ஜூலை, 17ல் கேரளா மாநிலம், திருச்சூரில் தலைமறைவாக இருந்த போது கைது செய்தனர். முன்னாள் அமைச்சர் விஜய-பாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலும், பிரவீன் குளித்தலை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் கடந்த, 31ல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்-கரும், பிரவீனும் கரூர் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் காலை, மாலை நேரங்களில், கையெழுத்து போட வேண்டும் என உத்தர-விட்டு, கரூர் ஜே.எம்.,-1 நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி-யது. அதன்படி நேற்று காலை, 10:00 மணிக்கு பிரவீன் கரூர் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில் கையெழுத்து போட்டார். பிறகு, காரில் கரூர்-கோவை சாலை ரெட்டிபா-ளையம் பகுதியில் உள்ள, டீக்கடைக்கு சென்றுள்ளார்.அப்போது, ஸ்விப்ட் காரில் பின் தொடர்ந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல், பிரவீன் மீது தாக்குதல் நடத்தி விட்டு, தப்பி சென்-றது. தாக்குதலில் கழுத்தில் காயமடைந்த பிரவீன், கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பிரவீன் மீது தாக்குதல் நடந்த, ரெட்டிபா ளையம் பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை, கரூர் டவுன் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பிரவீனை தாக்கிய கும்பலில் இருந்த ஒருவர், தப்பி ஓடும் போது அவரது மொபைல் போன் கீழே விழுந்துள்ளது. அதை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை