உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பஸ்சில் இருந்து பேட்டரி, டீசல் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

பஸ்சில் இருந்து பேட்டரி, டீசல் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

கரூர், ஆக. 22-கரூர் அருகே, பஸ்சில் இருந்து பேட்டரி, டீசலை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.கரூர், சின்ன ஆண்டாங்கோவில் ராம்சக்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 38, பஸ் பாடி கட்டும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்துக்கு, பராமரிப்பு பணிக்காக வந்த பஸ்சை, மணவாடியில் உள்ள தனியார் பள்ளியில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த, 19ல் பஸ்சில் இருந்த நான்கு பேட்டரிகள், 20 லிட்டர் டீசல் ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, வெங்கடேஷ் அளித்த புகார்படி, வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை