| ADDED : ஜூலை 30, 2024 04:48 AM
கரூர்: 'நெரூர் டாஸ்மாக் கடைகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்-ளது' என, பா.ஜ., சார்பில் கரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் சரவ-ணகுமார், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம் தென்பாகத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்-புகள் உள்ளன. நெரூர்--வேடிச்சிபாளையம் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.கடையில் இருந்து குடித்து விட்டு வாகனங்களில் வருபவர்கள், விபத்துகளில் சிக்குகின்றனர். சாலையோரம் அமர்ந்து மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுவதால், பெண்கள், குழந்-தைகள் உள்பட பலருக்கும் அச்சம் ஏற்படுகிறது. குடித்து விட்டு காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களை அருகில் உள்ள, விவ-சாய நிலங்களில் வீசி விட்டு செல்கின்றனர். கண்ணாடி மது பாட்டில்களை உடைத்து வீசுவதால், விளைநி-லங்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. டாஸ்மாக் அருகில், பள்ளி, வழிபாட்டு தலங்கள் இருப்பதால், பாதுகாப்-புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மக்கள் அத்தியாவசிய தேவைக-ளுக்கு சென்று வரும் சாலையில் டாஸ்மாக் கடை அமைத்துள்-ளது. இரவு, 7:00 மணிக்கு மேல் மக்கள் வெளியில் செல்ல முடி-யவில்லை. டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி விவசா-யிகள், பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.