உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரெங்கநாதர் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

ரெங்கநாதர் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

கரூர், கரூரில் பிரசித்தி பெற்ற, அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலில் கடந்த, 15ல் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து, நாள்தோறும் இரவு பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடந்து வருகிறது. கடந்த, 21 ல் கோவிலில், திருக்கல்யாண உற்வசம் நடந்தது. நேற்று காலை, 7:45 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இன்று காலை, அமராவதி ஆற்றில் தீர்த்த வாரி, நாளை ஆளும் பல்லாக்கு, வரும், 26 ல் ஊஞ்சல் உற்சவம், 27 ல் புஷ்ப யாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி