உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வடிகால் பாலம் சேதம் வாகன ஓட்டிகள் தவிப்பு

வடிகால் பாலம் சேதம் வாகன ஓட்டிகள் தவிப்பு

கரூர : கரூர், -ஜவகர் பஜாரில் உள்ள தாலுகா அலுவலகம் எதிரே ஈஸ்-வரன் கோவில் சாலை செல்கிறது. இந்த சாலையின் குறுக்கே, மழைநீர் வடிகால் கால்வாய் மேல் பகுதியில் சிறுபாலம் கட்டப்-பட்டது. இதன் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். கான்கிரீட் பாலத்தின் மேல் உள்ள கான்-கிரீட் பெயர்ந்து தற்போது சேதமடைந்துள்ளது.இரும்பு கம்பிகள் வெளியே நீட்டி கொண்டிருக்கின்றன. அந்த பாலம் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். சேதமடைந்த பாலத்தை, மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை