உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இந்திரா நகர் பிரிவில் விபத்து மேம்பாலம் அமைக்க எதிர்பார்ப்பு

இந்திரா நகர் பிரிவில் விபத்து மேம்பாலம் அமைக்க எதிர்பார்ப்பு

அரவக்குறிச்சி: இந்திரா நகர் பிரிவில் விபத்துகள் அதிகரித்து வருவதால், மேம்பாலம் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், இந்திரா நகர் அருகே நெடுஞ்சாலையிலிருந்து மண்மாரி வழியாக பள்ளப்பட்டிக்குள் செல்லும் பிரிவு ரோடு உள்ளது. திண்டுக்கல்லில் இருந்து பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி வழியாக கரூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் இந்திரா நகர் பிரிவு ரோடு வழியாக செல்ல வேண்டும். மேலும், வேலஞ்செட்டியூர், பெத்தாச்சி நகர், ஈசநத்தம், அம்மாபட்டி, ஜமீன் ஆத்துார், கருங்கல்பட்டி, பண்ணப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து கூலிவேலை செய்ய தொழிலாளர்கள் பள்ளப்பட்டி செல்ல வேண்டுமானால், இந்திரா நகரில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை குறுக்காக கடந்து செல்ல வேண்டும்.தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து வாகனங்களும் வேகமாக சென்று வருவதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, இந்திரா நகர் பிரிவில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ