உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / களஞ்சியம் செயலியில் பதிவேற்றம் அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம்

களஞ்சியம் செயலியில் பதிவேற்றம் அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம்

கரூர்: 'பணியாளர்களின் விடுமுறை உள்ளிட்ட விபரங்களை, 'களஞ்-சியம்' செயலி மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்' என்ற அறிவிப்புக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கண்டனம் தெரி-வித்துள்ளனர்.கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், மாநில தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர்களின் விடுமுறை உள்ளிட்ட விபரங்களை, 'களஞ்சியம்' செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, அறிவித்துள்ள கருவூல கணக்குத்துறை ஆணையரின் நடவடிக்கையை கண்டித்து, வரும், 27ல் ஆர்ப்-பாட்டம் நடத்தப்படும். அக்., 4, 5ல் தமிழ்நாடு ஊழியர் சங்-கத்தின், முதலாவது மாநில மாநாட்டை, கரூரில் நடத்துவது உள்-பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செய-லாளர்கள் நுார்ஜஹான், விஜயகுமார், பொது செயலாளர் லெட்-சுமி நாராயணன், பொருளாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை