மேலும் செய்திகள்
சாலையோர கடைகளை கண்டித்து மறியல்
19-Oct-2025
அ.தி.மு.க., சார்பில் புத்தாடை வழங்கல்
19-Oct-2025
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
19-Oct-2025
ஜவஹர் பஜாரில் தரைக்கடைகள் அகற்றம்
19-Oct-2025
கரூர்:கடந்த ஆண்டு ஜூன், 14-ல் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் உள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக அவர் இருந்தார். பிப்., 12ல் அவரின் அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.இலாகா இல்லாத அமைச்சராக இருந்த போது, கரூர் மாவட்டத்தில் நடந்த பல அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அழைப்புதழ்களில் அவரது பெயர் மற்றும் புகைப்படம் இடம் பெற்றது. அது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின், நிகழ்ச்சிகள், அழைப்பிதழ் உள்பட அனைத்து அரசு சார்ந்த நிகழ்வுகளில், செந்தில்பாலாஜி பெயர் பயன்படுத்தப்படவில்லை.இந்நிலையில், கரூர் மாநகராட்சி கூட்டம் இன்று நடக்கிறது. கூட்டத்தில் புகழூர்-வாங்கல் இணைப்பு சாலையில் தெரு விளக்கு கோரி வைக்கப்பட்டுள்ள, 22வது தீர்மானத்தில், 'மாண்புமிகு அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்படி' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் வைக்கப்படும் தீர்மானம் மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், கமிஷனர் சுதா உள்பட அரசு அதிகாரிகள் பார்வைக்கு பின் தான் அச்சடிக்கப்பட்டு இருக்கும்.மேயர், துணை மேயர் ஆகியோர் அரசியல் காரணத்திற்காக, அமைச்சர் என்ற வாசகத்தை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் கண்டும் காணாமல் அனுமதித்துள்ளனர். இது, தற்போது சர்ச்சையாகி உள்ளது. எனவே, இன்றைய கூட்டத்தில் , 'அமைச்சர்' என்ற வாசகம் கட்டாயம் எதிரொலிக்கும்.
19-Oct-2025
19-Oct-2025
19-Oct-2025
19-Oct-2025