| ADDED : ஆக 15, 2024 07:42 AM
கரூர்: கரூர், தான்தோன்றிமலை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், இரவு நேரத்தில் மின் தடையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தான்தோன்றிமலை துணை மின் நிலையத்திலிருந்து தான்தோன்றிமலை, காந்திகிராமம் உள்பட பல்வேறு பகுதிகளில் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், ஜவுளி, பஸ் பாடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு, அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. தற்போது மின்வெட்டு அமலில் இல்லாமல் இருக்கும் நிலையில், தான்தோன்றிமலை, காந்திகிராமம் பகுதிகளில் காலை, மாலை, இரவு நேரங்களில் அவ்வப்-போது அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. சில நேரங்களில், இரண்டு மணி நேரம் வரை மின் தடை ஏற்படுகிறது.இது குறித்து கேட்டால், கரூர் - திண்டுக்கல் பழைய சாலை விரிவாக்க பணிகள் நடக்கிறது. இதனால், மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது என அதிகாரிகள் கூறுகின்றனர். விரிவாக்க பணியால், பகல் நேரத்தில் மின் நிறுத்தம் ஏற்பட்டால் பரவாயில்லை. இரவு நேரங்களில் அடிக்-கடி மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இரவு நேர மின் தடையால் குழந்தைகள், முதியோர் துாங்க முடியாமல் தவிக்கின்றனர். இப்பி-ரச்னைக்கு மின்வாரியம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.