உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை பணிக்கு போலீஸ் பாதுகாப்பு கரூர் கலெக்டரிடம் பஞ்.,தலைவர் மனு

சாலை பணிக்கு போலீஸ் பாதுகாப்பு கரூர் கலெக்டரிடம் பஞ்.,தலைவர் மனு

கரூர் : 'சாலை அமைப்பதற்காக நில அளவை மேற்கொள்ள போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, வாயலுார் பஞ்., தலைவர் ரேவதி, கரூர் கலெக்டர் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார். அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், கிருஷ்-ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் வயலுார் பஞ்சாயத்துக்குப்பட்ட கோடங்கிபட்டியில் இருந்து அய்யர்மலை பிரிவு சாலை அமைக்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை உறுதி திட்டம் 2023- 2024 நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யட்டது. அங்கு, சில நபர்கள் இடையூறு செய்வதால், சாலை பணியை மேற்கொள்ள இயலவில்லை. இந்த எதிர்ப்பை மீறி பணி தொடங்கினால், எதிர்தரப்பு மூலமாக கைகலப்பு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகும் என அச்சம் ஏற்படுகிறது. போலீசார் பாதுகாப்புடன் நில அளவை பணி மேற்கொண்டு சாலை அமைப்பதற்கான இடம் கையகப்படுத்த முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ