உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

கரூர் : கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில், நேற்று பக்தர்கள் பங்கேற்றனர்.கரூர் நகரில் பிரசித்தி பெற்ற, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி சிலைக்கு பிரதோஷத்தையொட்டி நேற்று மாலை, 5:00 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபி ேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, நேற்று மாலை நந்தி சிலைக்கு வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. பிறகு, மூலவர் மேகபாலீஸ்வரர் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில்களிலும், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை