உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

கரூர் : ''காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில், முன்-னெரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகி-றது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் மாவட்டம் புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் வரும் தடுப்பணையில், கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்-கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால், காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பு உள்ள கார-ணத்தால் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, நீர்-வளத்துறை, வருவாய்த்துறை, போலீசார் ஆகியோர் எடுத்து வரு-கின்றனர். எந்த நேரமும் அதிக அளவில் நீர் திறப்பதற்கான வாய்ப்பு உள்ள காரணத்தால் காவிரி ஆற்றுப்பகுதியில் கரையோர பகுதியில் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும், புகைப்படம் எடுக்கவும் கூடாது. ஆடி 18 அன்று பொதுமக்கள் காவிரி ஆற்றில் வழிபாட்டிற்காக அதிக அளவில் பயன்படுத்தும் பகுதிகளில் பாதுகாப்பு முன்னேற்பா-டுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர், கூறினார். ஆய்வில் டி.ஆர்.ஓ., கண்ணன், கரூர் ஆர்.டி.ஓ.,முகமது பைசல், புஞ்சை புகலுார் வட்டாட்சியர் தனசேகர் ஆகியோர் உடன் இருந்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ