உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கழிவுநீரால் நோய் தொற்று அபாயம்

கழிவுநீரால் நோய் தொற்று அபாயம்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி டவுன் பஞ்.,க்குட்பட்ட, 3வது வார்டில், ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே, வடக்கு தெரு பகுதி அமைந்துள்-ளது. போக்குவரத்து நெரிசலான கரூர் சாலையில் அமைந்துள்ள இப்பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் கழிவுநீர் கால்வாய் கட்-டப்பட்டது. தற்போது கன மழை பெய்தால், சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி, கரூர் சாலை முழுதும் ஆக்கிர-மித்து விடுகிறது. ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே கழிவுநீர் தேங்கி-யுள்ளதால், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், அலுவலர்கள் சிரமப்பட்டு செல்கின்றனர். இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'இந்த சாலை வழியா-கத்தான், வார்டு கவுன்சிலர் காந்திமேரி தினந்தோறும் சென்று வருகிறார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க-வில்லை. மேலும், கழிவுநீர் தேங்கிய பகுதியில், கொசு மருந்து கூட தெளிக்கவில்லை. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொது-மக்களுக்கு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது' என்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை