உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குமாரபாளையம் பைபாஸ் சாலையில் டிராபிக் ஜாம்

குமாரபாளையம் பைபாஸ் சாலையில் டிராபிக் ஜாம்

குமாரபாளையம்: குமாரபாளையம் பைபாஸ் சாலையில், விடுமுறை நாளான நேற்று, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வழக்கமாக விடுமுறை நாட்களில், போக்குவரத்து அதிகம் இருப்பது வழக்கம். நேற்று விடுமுறை நாள் என்பதுடன், ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம், தேர்தல் பணிக்காக பல பகுதிகளுக்கு வாகனங்கள் சென்ற வண்ணம் இருந்ததால், குமாரபாளையம் புறவழிச்சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பால பணிகள் கடந்த, 5 மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டதால், வேகமாக செல்ல முடியாமல் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை