உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக் மீது லாரி மோதி டிரைவர் பலி

பைக் மீது லாரி மோதி டிரைவர் பலி

குளித்தலை: பைக் மீது, லாரி மோதியதில் டிரைவர் பலியானார். குளித்தலை அடுத்த, கீழ சக்கரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 29. லாரி டிரைவர். நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான பல்சர் பைக்கில், கரூர் சென்று விட்டு, ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். செல்லாண்டிபுரம் அருகே வந்த போது, எதிரே வந்த அசோக் லைலேண்ட் லாரி அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி வந்து பைக் மீது மோதியது. இதில் விஜயகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே விஜயகுமார் இறந்துவிட்டதாக கூறினார்.இது குறித்து இவரது மனைவி தீபிகா, 21, கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் லாரி டிரைவர் பாலவிடுதி உதயகவுண்டனுாரை சேர்ந்த வேல்முருகன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி