உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிராம உதவியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கிராம உதவியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர்:தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் அரசகுமார் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், அரசாணை எண், 33ல் திருத்தம் மேற்கொண்டு, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்; சி.பி.எஸ்., திட்ட சந்தா இறுதி தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் கருணாகரன், பொருளாளர் நாகப்பன், முன்னாள் மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணன், மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை