உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேதமான நிலையில் பத்தாம்பட்டி நிழற்கூடம்; தவிப்பில் பயணிகள்

சேதமான நிலையில் பத்தாம்பட்டி நிழற்கூடம்; தவிப்பில் பயணிகள்

கரூர் : மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள, பத்தாம்பட்டி நிழற்கூடத்தை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கரூரில் இருந்து கோடங்கிப்பட்டி வழியாக திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம், வேடசந்துார் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், கோடங்கிப்பட்டி அடுத்துள்ள பத்தாம்பட்டி பிரிவு வழியாக செல்கிறது. திண்டுக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, கருருக்கு வரும் வாகனங்கள் பத்தாம்பட்டி வழியாக செல்கிறது. இப்பகுதியில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.பத்தாம்பட்டி பிரிவு அருகே, பயணிகள் நலன் கருதி நிழற்கூடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்துள்ளதால், மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எந்த நேரமும் விழும் நிலையில் உள்ளதால், பயணிகள் நிழற்கூடத்தில் நிற்பதில்லை. எனவே, பயணிகள் நலன் கருதி நிழற்கூடம் சீரமைத்து தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை