| ADDED : ஜன 29, 2024 12:40 PM
கரூர்: திருக்குறள் பேரவையின், 38வது ஆண்டு விழா, தொழிலதிபர் தங்கராசு தலைமையில், நகரத்தார் சங்க கட்டடத்தில் நடந்தது. அதில், அரசு பள்ளிகளில் திருவள்ளுவர் மன்றம் தொடங்க வேண்டும். திருக்குறள் திறனறிவு போட்டிகள், 6, 7, 8ம் வகுப்புகளுக்கு நடத்தி, பெற்றோருக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். மாணவர்களுக்கு தமிழ் பெயர் வைக்கும் வகையில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுக்கு முன், நடைமுறைகளை எளிதாக்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு மேல் செயல்பாட்டில் உள்ள தமிழ் இலக்கிய அமைப்புகளுக்கு, அரசு உதவிகள், விருதுகள் வழங்க வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, திருக்குறள் பேரவை ஆண்டு மலர் வெளியிடப்பட்டது.திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், தொழிலதிபர் சிவசுப்பிரமணியன், வீரப்பன், ஆதப்பன், செயம் கொண்டான் உள்பட பலர் பங்கேற்றனர்.