உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 7 அடிநீள சாரை பாம்பு மீட்பு

7 அடிநீள சாரை பாம்பு மீட்பு

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த சேலம் சாலையில் வசிப்பவர் துரைசாமி, விவசாயி; இவரது தென்னந்தோப்பில் பாம்பு ஒன்று இருப்பதாகவும், இதனால் அங்கு தோட்டத்தில் வேலை செய்பவர்கள் உள்ளே செல்ல பயப்படுவதாகவும், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, தீயணைப்பு நிலைய வீரர்கள், துரைசாமி தோட்டத்திற்கு சென்று பாம்பை தேடினர். தென்னை மட்டைக்கு அடியில் படுத்திருந்த, 7 அடி நீளமுள்ள மஞ்சள் நிற சாரை பாம்பை பிடித்தனர். தொடர்ந்து ராசிபுரம் வனத்துறை அலுவலர்கள் உதவியுடன் அருகில் இருந்த காப்புக்காட்டில் விட்டனர். இதனால் விவசாய தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை