உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஏசி கம்ப்ரசரை எரித்த பெண் மீது வழக்குப்பதிவு

ஏசி கம்ப்ரசரை எரித்த பெண் மீது வழக்குப்பதிவு

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, 'ஏசி' கம்ப்ரசரை எரித்த பெண் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் நான்கு சாலை பகு-தியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 47; இவரது உறவினர் சசிகலா, 50; இருவருக்கும் முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், கடந்த, 30ல் மோகன் ராஜின் வீட்டின் பின்புறம் உள்ள, 15,000 ரூபாய் மதிப்புள்ள, 'ஏசி' கம்ப்ரசரை சசிகலா, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார். இதுகுறித்து, மோகன்ராஜ் அளித்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார், சசிகலா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை