உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மத்திய, மாநில சர்க்கரை துறை அதிகாரிகள் குழுவினர் மோகனுார் ஆலையில் ஆய்வு

மத்திய, மாநில சர்க்கரை துறை அதிகாரிகள் குழுவினர் மோகனுார் ஆலையில் ஆய்வு

மோகனுார்,தமிழக அரசின், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 2025-26ம் ஆண்டு நிதிநிலை அறிக்கைப்படி, மத்திய, மாநில அரசு மற்றும் சென்னை சர்க்கரை துறையை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவினர், மோகனுார் சர்க்கரை ஆலையின் கரும்பு பண்ணை, புதிய கரும்பு ரக வயல், பொறியியல் பிரிவு மற்றும் உற்பத்தி பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில், கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் சதீஷ்குமார், ராஜபாபு, துரைசாமி, உதவி பேராசிரியர் வினய் குமார், டில்லி தேசிய கூட்டுறவு சர்க்கரை இணையத்தின் இளநிலை தொழில் நுட்ப வல்லுனர்கள் ஸ்ரீவிவேக் பிரதாம் சிங், கர்னே முரளிதர் சவுத்ரி, பேராசிரியர் ஆர்.பி.டவலிஸ்ரீ சோமசுந்தரம், தஞ்சை அறிஞர் அண்ணா மற்றும் அரூர் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர்கள், சென்னை சர்க்கரை துறை தலைமை சர்க்கரை பொறியாளர் சக்திவேல், தலைமை ரசாயனர் செந்தில்குமரன், தலைமை கரும்பு பெருக்கு அலுவலர் வெற்றிவேலன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.தொடர்ந்து, ஆலை அலுவலகத்தில் முன்னோடி விவசாயிகள் கருத்து கூட்டம் நடந்தது. இதில், குழு உறுப்பினர்கள் ஆலை அங்கத்தினர்களுடன் கலந்துரையாடல் நடத்தி, விவசாயிகள் பல்வேறு கரும்பு சாகுபடி குறித்து கோரிக்கை மனுக்களை அளித்தினர். அவற்றை, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, கரும்பு அலுவலர்கள், கரும்பு உதவியாளர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் குப்புசாமி, அலுவலர்கள், அங்கத்தினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை