உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் தேர்தல் பணி ஆலோசனை

அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் தேர்தல் பணி ஆலோசனை

குளித்தலை, குளித்தலை அடுத்த பொய்யாமணியில், நேற்று அ.தி.மு.க., கிளை பொறுப்பாளர்கள் பி.எல்.ஏ.---2, சிறப்பு தீவிர வாக்காளர் பணி மற்றும் கட்சி தேர்தல் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய துணை செயலர் பாலன் தலைமை வகித்தார்.ஒன்றிய செயலர் கருணாகரன் பங்கேற்று, கிளை பொறுப்பாளர்கள் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலருடன் சென்று, வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட படிவத்தில் முறையாக பதிவு செய்துள்ளார்களா என்பதை உடனிருந்து கவனிக்க வேண்டும். தி.மு.க.,வினர் தலையீடு உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டால், அதற்கான விளக்கம் கேட்டு முறையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்வதில் அலட்சியம் காணப்பட்டால், பெயர்கள் விடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது என ஆலோசனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை