| ADDED : டிச 10, 2025 10:12 AM
கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், மே மாதம் முழு-வதும் விடுமுறை வழங்க வேண்டும், காலி பணி-யிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு-பட்டனர். அதன்படி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், மாவட்ட தலைவர் பத்மாவதி தலை-மையில், கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது. அதில், 25க்கும் மேற்பட்டவர்களை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.