உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆட்டோ தொழிலாளர் சங்கம் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

ஆட்டோ தொழிலாளர் சங்கம் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஆட்டோ டிரைவர்கள் மீது தடியடி நடத்திய, திருவாரூர் மாவட்ட போலீசாரை கண்டித்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில், திருவாரூர் புதிய பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ நிறுத்துவது சம்பந்தமாக அக்., 31ல் போராட்டம் நடந்தது. அதில் பங்கேற்றவர்கள் மீது தடியடி நடத்திய அந்த மாவட்ட போலீசாரை கண்டித்தும், கடந்த, 17 இரவு வீடு புகுந்து, சி.ஐ.டி.யு., நிர்வாகிகளையும், ஆட்டோ சங்க நிர்வாகிகளையும் கைது செய்ததை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் தண்டபாணி, பொருளாளர் கவுசிக் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை