உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாலசுப்பிரமணிய சுவாமி குருபூஜை விழா

பாலசுப்பிரமணிய சுவாமி குருபூஜை விழா

கரூர், கரூர் சித்தர் ஆன்மிக பாலசுப்பிரமணிய சுவாமிகளின், 13வது குரு பூஜை விழா, க.பரமத்தி அருகே குமார கவுண்டன்புதுாரில் நேற்று நடந்தது.நேற்று காலை, 8:15 மணி முதல், 11:00 மணி வரை சிறப்பு ேஹாமம், பின்னர் மதியம், 2:00 மணி வரை குரு பூஜை, மகேஸ்வர பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில், தொழிலதிபர் ரத்தினம் உள்பட, 100 க்கும் மேற்பட்ட சித்தர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். பிறகு, கரூரில் சித்தரின் திருமேனி திரு உருவப்படம் அலங்கரிப்பட்டு ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை, பாலசுப்பிரமணிய சுவாமிகளின், மெய் அன்பர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்